உடனே புறப்படு !

உடனே புறப்படு !

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

                                             
                                குடி மகன் மனைவி 
               
                நீர் அடித்து, நீர் விலகாது ,

                ஆனாலும் ,

                நீர் அடித்து ,

                நீர் அடித்தால் ,

                நான் விலகுவேன் .

புதன், 15 ஆகஸ்ட், 2012

ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012

 




செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012



                கட்டுப்பாடு  

உன் கல்லூரி பேருந்தில்,

வேகக் கட்டுப்பாடு  கருவி

பொருத்தி  உள்ளார்களாம். 

மோகக்  கட்டுப்பாடு கருவி

அல்லவா  பொருத்த வேண்டும். 








சனி, 7 ஜூலை, 2012

                 


                   காலம்
                    
          எங்கள் சங்கத்தின்

          நிரந்தர தலைவர்,

          இன்று,

          இறந்தோர் சங்கத்தின்

          நிரந்தர உறுப்பினர்

         ஆனார்.




                   

திங்கள், 2 ஜூலை, 2012

வியாழன், 17 செப்டம்பர், 2009

காரணம்

தற்கொலைக்கு முயன்ற ,

என்னைக் காரணம் கேட்டபோது ,

பதில் , தெளிவாய்ச் சொல்லிவிட்டேன்

ஒரு வேளை, என்னிடம்

வாழ்வதற்கான காரணம்

கேட்டு இருந்தால் ,

நான் வசமாய் மாட்டி இருப்பேன் !

சனி, 12 செப்டம்பர், 2009

அறிவுள்ள சோம்பேறி

பாபு வீட்டைவிட்டுக் கிளம்ப செருப்பைக் காலில் அணிந்த நேரத்தில் இருந்தே வீட்டை மறந்து விடுவான் . எந்தக் காரியத்திற்காகச் செல்கிறானோ அந்த விஷயம் மட்டுமே அவன் மனதை முழுதுமாக ஆக்கிரமித்து இருக்கும் . அதே சிந்தனையில் அவன் பேருந்து நிறுத்தத்தைச் சென்று அடைந்தான் .அந்த காலை நேரத்தில்தான் எவ்வளவு பரபரப்பாக மக்கள் ஓடுகிறார்கள் . எல்லோரும் ஏதோ பதைபதைப்புடனும் , எதையோ விட்டு விடக் கூடாது என்றும், தனக்கு பின் பக்கம் வேகமாக வரும் "ஆம்புலன்ஸ்'க்குக் கூட வழி விடத் தோன்றாமல் செல்லும் , மனிதநேயம் முற்றிலும் மறந்த இவர்கள் வாழ்வில் பிறருக்கு என்னதான் உதவி செய்வார்களோ ? என்று பாபுவின் சிந்தனை ஓட ஆரம்பித்தபோது அதைத் தடை செய்வது போல அவன் மிக அருகில் ஒரு பிட்சைக்காரன் "தர்மம்" கேட்டு நின்றான். அவன் குளித்து மாதங்கள் ஆகி இருக்கும் . பாபு அருவருப்புடன் , சற்று நகர்ந்தான் . பாபுவின் மிக அருகில் ஒரு டிப் -டாப் ஆசாமி ஒருவன் , சார் , பிச்சைக்காரர்கள் தொல்லை பெருந்தொல்லையாகப் போச்சு சார் , ஒரு ஆளிடம் ஒரு ரூபாய் வாங்கினாலும் எப்படியும் இவன் ஒரு நாளைக்கு நூறு ரூபாய் சம்பாதித்து விடுவான் சார் . இவன் மாதிரி ஆட்களை நாம் என்கரேஜ் செய்யக் கூடாது சார் . நம்ம நாட்டின் இமேஜ் இந்த மாதிரி பிட்சைக்கார பயகலால்தான் வீணாகப் போகுது சார் ,என்று ஒரு குட்டி பிரசங்கம் செய்து விட்டார் . அமைதியாக , அவரை முறைத்த பிட்சைக்காரன் , பாபுவிடம் , சார் நான் கேட்க்கிறேன் , நீங்கள் முடிந்தாக் கொடுங்க , இல்லைனா விடுங்க சார். இதனால் உங்களுக்கு ஒன்றும் பாதிப்பு இல்லை. ஆனா , இந்த ஆளு டிப்-டாப் ஆக உடை அணிந்து இருந்தாலும் , இவர் வாயில் வைத்து சிகரட்டை ஊதிக்கொண்டே உங்களுக்கு மிக அருகில் நின்று , உங்களுக்கும் , பக்கத்தில் உள்ள எல்லோருக்கும் புகை மூலம் நோயைப் பரப்புகிறார் என்று கூறி , பாபுவை ஆச்சரியத்தில் ஆழ்த்தினான் .பணம் படைத்த முட்டாள்கள் உள்ள உலகில் , அறிவுள்ள பிட்சைக்காரன் இருப்பதும் சரிதான் என்றும் , ஒரு வேளை இந்த பிட்சைக்காரன் அறிவுள்ள சோம்பேறியாக இருப்பான் என்று தன்னைச் சமாதானம் செய்துகொண்டு , அந்த டிப்-டாப் ஆசாமி பக்கம் பாபு திரும்பினான் . அங்கே அவன் விட்டுச் சென்ற அணைக்காத சிகரட்டு மட்டும் புகைந்து கொண்டு இருந்தது,

வெள்ளி, 11 செப்டம்பர், 2009

சுயநலம்

மழையே ,
நன்றாகப்பெய்,
என்னிடம் ,
குடை இருக்கிறது.

வியாழன், 10 செப்டம்பர், 2009

உண்மைச் செய்தி

மலச்சிக்கல் வந்த
எவனும் சொல்வான்
முக்கிய செய்தி!

நிலைமை

அலுவலகப் பலகையின்

தூசி தட்டிப் பார்த்த பின்தான்

தெரிந்தது , அது ,

மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் என்று !

புதன், 9 செப்டம்பர், 2009

வால் ஆட்டினாலும் ........

நான் படித்தது என்னவோ பாரதியார் பாடம் சொல்லிக்கொடுத்தப் பள்ளிக்கூடத்தில்தான் , ஆனால் என்ன அவர் பாடம் சொல்லிக்கொடுத்தக் காலத்தில் நான் பிறக்கவே இல்லை . பாரதியாரின் மார்பளவு சிலை எங்கள் பள்ளி நுழைவு வாசலில் உண்டு . அந்த ஊரை விட்டு வந்து வருடம் பல ஆனாலும் , டவுன் பஸ்சில் பள்ளிக்கூடத்தை நான் எப்போது கடந்து சென்றாலும் ,அப்போது பாரதியாரின் சிலையை எட்டிப்பார்க்கத் தவறுவதே இல்லை . அப்போது என்னில் சில நினைவுகளும் எட்டிப்பார்க்கும் .

அப்போது எல்லாம், தமிழ் வாத்தியார் வேட்டி தான் கட்டி இருப்பார் . ஆங்கிலம் சொல்லித்தரும் வாத்தியார் பெரும்பாலும் இன் செய்து பேன்ட் அணிந்து இருப்பார் .

அன்று ஆங்கில வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டு இருந்த போது , ஒரு சக மாணவன் பாடத்தைக் கண்டு கொள்ளாமல் தனது கால்களை ஆட்டிக்கொண்டு இருந்தான். அதைப்பார்த்த ஆசிரியர் பாடத்தை நிறுத்திவிட்டு அவனை எழுந்து நிற்கும்படி சொன்னார்.

பின்பு , எவன் ஒருவன் கால்களை ஆட்டுகிறானோ , அவன் கீழ் தரமான எண்ணங்கள் மிகுந்த ஒருவனாக இருப்பான் என்றும் , பெண் ஆசை மிகுந்த ஒருவனாக இருப்பான் என்றும் , அவன் வாழ்கையில் முன்னுக்கு வர இயலாது என்றும் , அவன் மீது பெரியவர்களுக்கு நல்ல எண்ணம் வரும் வாய்ப்பு இல்லை என்றும் , தன்னுடையக் கருத்தை ஆணித்தரமாய் வகுப்பில் சொல்லிக்கொண்டு இருந்தபோதே அந்த வகுப்பு முடிந்த அடையாளமாய் மணி
ஒலித்தது .

அடுத்து , உள்ளே வந்த தமிழ் வாத்தியார் இருக்கையில் அமர்ந்தவாறு ,

ஆடிக் குடத்தடையும் ஆடும் போதே இரையும் ....என்ற பாடலைச் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார் , தனது கால்களை வேகமாக

ஆட்டிக்கொண்டே .............?
புயல் வந்தவுடன் ,
வெள்ளம் வந்தவுடன் ,
சுனாமி வந்தவுடன் ,
புறப்படத் தயாராய் வைத்திருந்தப்
பெட்டியுடன்,
புறப்பட்டேன் ,
வீட்டை விட்டு,
எனக்குக் கோபம் வந்தவுடன் !

வெள்ளி, 4 செப்டம்பர், 2009

பூட்டிய கதவில்
எழுதி இருந்த வாசகம் ,
"இருபத்தி நாலு"
மணி நேர சேவை!

வியாழன், 3 செப்டம்பர், 2009

மிருகாபிமானம்

பலிகொடுக்க
ஆட்டுடன்,பேருந்தில் அவன் ,
விபத்து,
அவன் பலியானான் ,
ஆடு அழுதது !
பேருந்தில்,
எல்லோரும் 
சன்னல் ஓரச் சீட்டை
எனக்குத் தருகின்றனர் .
ஆம்!
மழை பெய்கின்றது !
வீடுகட்டி
வாடகைக்கு விட்டவன்
தினம் அலைந்தான்
கோர்ட்டுக்கு ,
கோவில் கட்டி உண்டியல் வைத்தவன் ,
தினம் ,
சில்லரை தந்தான்
முழு நோட்டுக்கு .
புல்லாங்குழலில்
கவர்ச்சித்
துளைகள்,
ஓடும் படகில்
ஆபாசஓட்டைகள்.

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2009

              
தொடர்ந்து பார்க்கும்
தொலைக்காட்சித்
தொடர்களின்
முடிவு தெரியாமல்,
திடீர் என்று
இறந்து போனதால்,
என் அத்தையின்
ஆத்மா
சாந்தி அடையவில்லை!

Hits

url submission