உடனே புறப்படு !

உடனே புறப்படு !

சனி, 12 செப்டம்பர், 2009

அறிவுள்ள சோம்பேறி

பாபு வீட்டைவிட்டுக் கிளம்ப செருப்பைக் காலில் அணிந்த நேரத்தில் இருந்தே வீட்டை மறந்து விடுவான் . எந்தக் காரியத்திற்காகச் செல்கிறானோ அந்த விஷயம் மட்டுமே அவன் மனதை முழுதுமாக ஆக்கிரமித்து இருக்கும் . அதே சிந்தனையில் அவன் பேருந்து நிறுத்தத்தைச் சென்று அடைந்தான் .அந்த காலை நேரத்தில்தான் எவ்வளவு பரபரப்பாக மக்கள் ஓடுகிறார்கள் . எல்லோரும் ஏதோ பதைபதைப்புடனும் , எதையோ விட்டு விடக் கூடாது என்றும், தனக்கு பின் பக்கம் வேகமாக வரும் "ஆம்புலன்ஸ்'க்குக் கூட வழி விடத் தோன்றாமல் செல்லும் , மனிதநேயம் முற்றிலும் மறந்த இவர்கள் வாழ்வில் பிறருக்கு என்னதான் உதவி செய்வார்களோ ? என்று பாபுவின் சிந்தனை ஓட ஆரம்பித்தபோது அதைத் தடை செய்வது போல அவன் மிக அருகில் ஒரு பிட்சைக்காரன் "தர்மம்" கேட்டு நின்றான். அவன் குளித்து மாதங்கள் ஆகி இருக்கும் . பாபு அருவருப்புடன் , சற்று நகர்ந்தான் . பாபுவின் மிக அருகில் ஒரு டிப் -டாப் ஆசாமி ஒருவன் , சார் , பிச்சைக்காரர்கள் தொல்லை பெருந்தொல்லையாகப் போச்சு சார் , ஒரு ஆளிடம் ஒரு ரூபாய் வாங்கினாலும் எப்படியும் இவன் ஒரு நாளைக்கு நூறு ரூபாய் சம்பாதித்து விடுவான் சார் . இவன் மாதிரி ஆட்களை நாம் என்கரேஜ் செய்யக் கூடாது சார் . நம்ம நாட்டின் இமேஜ் இந்த மாதிரி பிட்சைக்கார பயகலால்தான் வீணாகப் போகுது சார் ,என்று ஒரு குட்டி பிரசங்கம் செய்து விட்டார் . அமைதியாக , அவரை முறைத்த பிட்சைக்காரன் , பாபுவிடம் , சார் நான் கேட்க்கிறேன் , நீங்கள் முடிந்தாக் கொடுங்க , இல்லைனா விடுங்க சார். இதனால் உங்களுக்கு ஒன்றும் பாதிப்பு இல்லை. ஆனா , இந்த ஆளு டிப்-டாப் ஆக உடை அணிந்து இருந்தாலும் , இவர் வாயில் வைத்து சிகரட்டை ஊதிக்கொண்டே உங்களுக்கு மிக அருகில் நின்று , உங்களுக்கும் , பக்கத்தில் உள்ள எல்லோருக்கும் புகை மூலம் நோயைப் பரப்புகிறார் என்று கூறி , பாபுவை ஆச்சரியத்தில் ஆழ்த்தினான் .பணம் படைத்த முட்டாள்கள் உள்ள உலகில் , அறிவுள்ள பிட்சைக்காரன் இருப்பதும் சரிதான் என்றும் , ஒரு வேளை இந்த பிட்சைக்காரன் அறிவுள்ள சோம்பேறியாக இருப்பான் என்று தன்னைச் சமாதானம் செய்துகொண்டு , அந்த டிப்-டாப் ஆசாமி பக்கம் பாபு திரும்பினான் . அங்கே அவன் விட்டுச் சென்ற அணைக்காத சிகரட்டு மட்டும் புகைந்து கொண்டு இருந்தது,

கருத்துகள் இல்லை:

Hits

url submission